எங்களைப் பற்றி

                 ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக எமது எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி புகழ் பெற்று விளங்குகிறது. இது திருப்பாண்டிக்கொடுமுடியில், புனித காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரின் பெயரில் அமைந்த, நூறாண்டுகளுக்கு மேலாக கல்விச்சேவை புரிந்து வரும் எங்கள் ஸ்ரீசங்கர வித்யாசாலா பள்ளிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

                           இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் மாநில அரசு வழங்கும்   நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை பெற்றுள்ளார்கள் என்பதை பெருமையோடு நினைவு கூறுகிறோம்.

                          இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் இப்பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாண்புமிகு நீதிபதிகளாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர்களாகவும், மாண்புமிகு அமைச்சர்களாகவும் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் , சட்டமன்ற உறுப்பினர்களாகவும், பெருமைமிகுந்த வழக்குரைஞர்களாகவும் சாதனை புரியும் மருத்துவர்களாகவும், புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும், விவசாயத்துறையில் வல்லுநர்களாகவும் சிறந்து விளங்குகின்றனர்.

             பார் புகழும் பலதுறை வல்லுநர்களை உருவாக்கியுள்ள இப்பள்ளி, இன்றும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் பல மாணவர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

           தற்போது 1300 மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 37 ஆசிரிய – ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.