முன்னாள் மாணவர் அமைப்பு

alumni

                செழிப்பும் சிறப்பும் வாய்ந்த கொங்கு நாட்டின் திருத்தலங்களில் புகழ்பெற்ற கொடுமுடி காவிரிக் கரையில் கலங்கரை விளக்கமாக விளங்கி நூறாண்டுகளுக்கு மேல் இப்பகுதி மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிக்கொண்டிருப்பது எஸ்.எஸ்.வி மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாகிய நாம் இத்தருணத்தில் ஒன்றாக சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

         நம் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்னேற்றத்திலும் இப்பகுதி சமூக முன்னேற்றதிலும் ஏழை குழந்தைகளின் கல்விப் பணிக்கு பங்காற்றி மனித நேயத்திற்கு அவ்வப்போது ‘உயிர் நீர்” ஊற்றி வளர்த்து வருவது போற்றுதற்குரியது. நாம் முன்னேறினால் நம் வீடு முன்னேறும், வீடு முன்னேறினால் நம் சமுதாயம் முன்னேறும் எனவே கொடுமுடி சுற்றுவட்டார மக்களின் முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றும் எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்றும் காலம் கனிந்துள்ளது எனவே எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களாகிய நாம் பள்ளியின் கட்டிடப் பணி மற்றும் பள்ளியின் வளர்ச்சியில் கை கோர்த்துப் பணியாற்ற விரைந்து ஒன்று படுவோமாக.

முன்னாள் மாணவர் அமைப்பு பலம் பெறுக…                           எஸ்.எஸ்.வி மேல்நிலைப் பள்ளியின் புகழ் ஓங்குக… 

நமது பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பில் இணைய கீழ்க்காணும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.