பள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்

1 1978 ல் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த திரு.கே.எம்.பெரியசாமி அவர்கள் தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷணன் விருது பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
2 1990 ல் தலைமை ஆசிரியர் திரு.கே.பி.சிவசுப்பிரமணியம் அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தார்.
3 1999 ல் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த திரு.ஏ.பழனிசாமி அவர்கள் தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷணன் விருது பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
4 2008 ல் தலைமை ஆசிரியர் திரு.கே.வெள்ளியங்கிரி அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தார்.
5 1988 ல் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் என்னும் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். இப்பாட ஆசிரியர் திரு.சி.பரமசிவம் அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார்.
6 1990 ல் சிறப்புத்தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடத்தை மாணவர் பெற்றுள்ளார். இப்பாட ஆசிரியர் திரு.ஆர்.நல்லசாமி அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார்.
7 2015 ல் சிறப்புத்தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தை மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பாட ஆசிரியர் திரு.பி.எஸ்.கோபி அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார்.
8 2008 ம் ஆண்டு அகில இந்திய அளவில் நாக்பூரில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் நம் பள்ளி ஆசிரியர் திரு.கே.மோகன்ராஜ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
9 நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற பாரதியார் தின பூப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
10 1986 ல் நம் பள்ளி மாணவன் எம்.டி.தண்டபாணி தமிழ்நாடு பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு பெற்று அகில இந்திய அளவில் மத்திய பிரதேசத்தில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
11 35 சாரண மாணவர்கள் 1996 முதல் 2013 வரை ஜனாதிபதி விருது பெற்றதும் 1994 முதல் 2013 வரை 153 மாணவர்கள் ஆளுநர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.