காலக்கோடு :

1910

கொடுமுடியில் திரு.நாராயண ஐயரால் குழந்தைகள் சிலரோடு திண்ணைப்பள்ளி    தொடங்கப்பட்டது.

 

மூலனூர் திரு.முத்துசாமிக்கவுண்டர் திரு.நாரயண ஐயரோடு இணைந்து பள்ளி வளர்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டினார்.

 

மூலனூர் திரு.முத்துசாமிக்கவுண்டர் எஸ்.எஸ்.வி சாலா போர்டுக்கு 1.36 ஏக்கர் நஞ்சை பூமியும் ஒரு தார்சு வீடும் 3 கடைகளையும் நன்கொடையாக அளித்தார்.

 

எஸ்.எஸ்.வி சாலா போர்டு மினிட் புக் துவங்கப்பட்டது.

1911

திரு.நாராயண ஐயர், மூலனூர் திரு.முத்துசாமிக்கவுண்டர் இவர்கள் தலைமையில் முதல் கூட்டம் கூட்டப்பட்டது.

1914

‘ கொடுமுடி ஸ்ரீசங்கர வித்யாசாலா போர்டு “ பதிவுச்சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது.

1917

திரு.சி.பெரியசாமிக்கவுண்டர் மற்றும் 30 உறுப்பினர்கள் கொண்;ட குழு போர்டில் இணைந்தது.

1920

திரு.பெரியண்ண செட்டியார் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தம் வாழ்நாள் முழுவதும்     ( 1932 வரை ) அப்பதவியில் பணியாற்றினார்.

1922

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை பள்ளி மாணவர்கள் முதன் முதலாக  எழுதினர்.

1926

திரு.பெரியண்ண செட்டியார் பள்ளியின் வளர்ச்சிக்கு தமது அசையா சொத்துக்களான 8.26 ஏக்கர் நிலம் மற்றும் சிவகிரியில் 35.58 ஏக்கர் தரிசு நிலத்தையும் தானமாக வழங்கினார்.

1936

வெள்ளிவிழா நினைவுக்கட்டிடம் கட்டப்பட்டது.

1966

நமது நிர்வாகத்தின் கீழ் மகளிருக்கென தனியாக எஸ்.எஸ்.வி மகளிர் உயர்நிலைப்பள்ளி கொடுமுடியில் துவங்கப்பட்டது.

1978

எஸ்.எஸ்.வி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பிரிவில் ( 11 மற்றும் 12 ம் வகுப்புகள் ) இருபாலரும் படிக்கும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

1979

எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளி கொடுமுடியில் துவங்கப்பட்டது.

1986

எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளி சிவகிரியில் துவங்கப்பட்டது.

1989

சிவகிரியில் எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளி மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

1990

எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளி கொளாநல்லியில் துவங்கப்பட்டது.

1991

கோசகாட்டூர் திருமதி.லீலாவதி அவர்கள் 0.97 ஏக்கர் நிலத்தையும், குட்டப்பாளையம் திருமதி.கே.எஸ்.பி.மீனாட்சியம்மாள் அவர்கள் 9.98 ஏக்கர் கொளாநல்லியில் உள்ள புஞ்சை நிலத்தையும் கொடுமுடி திரு.சி.ஜி.சாமிநாதன் அவர்கள் 2 ஏக்கர் நிலத்தையும் எஸ்.எஸ்.வி போர்டுக்கு தானமாக கொடுத்தனர்.

1994

சிவகிரி எஸ்.எஸ்.வி மெட்ரிக் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

2015

பழைய கட்டிடங்கள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் சூழ்நிலையில் இருந்தன. மேலும் அரசின் தற்போதைய விதிகளின்படி அனைத்து கட்டிடங்களும் தார்சு கட்டிடங்களாக இருக்க வேண்டும் என்பதால்பழைய கட்டிடங்கள் அனைத்தும் முழுவதும் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.