மன்ற செயல்பாடுகள்

உயர்நிலைப்பள்ளி அளவில் செயல்படும் மன்றங்கள் :

  • தமிழ் மற்றும் ஆங்கில மன்றங்கள்
  • கணித மன்றம்
  • அறிவியல் மன்றம்
  • சமூக அறிவியல் மன்றம்

மேல்நிலைப்பள்ளி அளவில் செயல்படும் மன்றங்கள் :

  • தமிழ் இலக்கிய மன்றம்
  • ஆங்கில இலக்கிய மன்றம்

தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ – மாணவிகளுக்கு பள்ளி ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகினறன.

நாட்டு நலப்பணித்திட்டம்

        நமது பள்ளியில் இத்திட்டம் சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 50 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு விடுமுறையில் பள்ளிக்கு அருகில் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாணவர்களிமும், பொது மக்களிடமும் சேவை மனப்பான்மையை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. நமது பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக திரு.என்.சிவநாதன் ( வணிகவியல் ஆசிரியர் ) அவர்கள் உள்ளார்.

தேசிய மாணவர் படை

        ஜூலை 2008 ல் நமது பள்ளியில் தேசிய மாணவர் படை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. நமது பள்ளி தேசிய மாணவர் படை பிரிவு எண் : 206/1. தற்போது 100 மாணவர்களைக் கொண்டு தேசிய மாணவர் படை இயங்கி வருகிறது. நமது பள்ளியின் தேசிய மாணவர் படை அதிகாரியாக மூன்றாம் நிலை அலுவலர். திரு.கே.மோகன்ராஜ் (உடற்கல்வி இயக்குநர்) அவர்கள் உள்ளார். ஒவ்வொரு வருடமும் நமது தேசிய மாணவர் படை வீரர்கள் பல்வேறு பயிற்சி முகாம்களில் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர்.

        மாணவர்களிடையே நன்னடத்தை, தோழமை, மதச்சார்பின்மை, சாகச மனப்பான்மை, சுயநலமற்ற சேவை, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்ப்பதை நோக்கமாய் கொண்டு தேசிய மாணவர் படை இயங்கி வருகிறது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்பதே தேசிய மாணவர் படையின் குறிக்கோள் ஆகும்.

தேசியப் பசுமைப்படை

        2002 ம் ஆண்டு முதல் 8ம் வகுப்பு படிக்கும் 25 மாணவர்களைக் கொண்டு தேசிய பசுமைப் படை தொடங்கப்பட்டு மாணவர்களிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் 1500 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியினை இப்படை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேசிய பசுமைப் படை சார்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வண்ணம் பேரணிகளும், போட்;டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இச்சிறப்புமிக்க தேசிய பசுமைப்படையை திரு.எஸ்.நவநீதன் ( கணித ஆசிரியர் ) அவர்கள் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

இளஞ்செஞ்சிலுவை சங்கம்:

        நமது பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள இளஞ்செஞ்சிலுவை சங்கமானது இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஈரோடு கிளையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. 75 மாணவர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி ஆசிரியருடன் செயல்படும் இச்சங்கம் தூய்மை இந்தியா திட்டம் , சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொற்றுநோய் பாதுகாப்பு முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக திரு.எஸ்.சிவானந்தம் ( தமிழாசிரியர் ) அவர்கள் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வருகிறார்.

சாரணர் படை:

        பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் ஈரோடு பிரிவின் ஒரு பதிவு பெற்ற அமைப்பாக நமது பள்ளியின் சாரணர் படை இயங்கி வருகிறது. பயிற்சி பெற்ற சாரண ஆசிரியரின் தலைமையில் 30 மாணவர்களைக் கொண்டு  செயல்பட்டு வருகிறது. மாணவர்களிடையே சமூக வளர்ச்சி மற்றும் சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும். நம் பள்ளி சாரணர்கள் பலர் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் விருதுகளைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.